Saturday 15 April 2017

நெஞ்சமதில் உன்னை வைத்தேன் பாகம் 16

பாகம் 16

அடுத்த நாள் சனி, மதியம் வரை மட்டுமே ஆபிஸ். தனக்கென பவிக்கு கார் உண்டு. அதைத் தானே தான் ஒட்டிக்கொண்டு போய் வருவாள். மதியம் ஆபிசிலிருந்து மனம் கேளாமல் வாசுவின் வீடுவரை ஓட்டினாள். வீட்டின் வாசலில் வண்டியை நிறுத்தி நோட்டம் பார்த்தாள். அது ஒரு பிளாட். அதில் எந்த வீடு என்று தெரியவில்லை. ‘சே இதுகூட தெருஞ்சுக்கலையே என்று நொந்து போனாள்.
அப்போது வாசு அழகிய ஒரு பெண்ணோடு லிப்டிலிருந்து வெளியே வந்தான்... அவளை லேசாக அணைத்தபடி பேசி சிரித்துக்கொண்டே வந்தவன் இவளை பார்க்கவில்லை... பவிக்கு எரிந்தது... ‘யாரிவள், என்ன வேண்டி கிடக்கு சிரிப்பும் பேச்சும்?’ என்று குமைந்தாள்.

அவன் யாரோடு போனால் உனக்கு என்ன.... அவன் வாழ்க்கை அவன் இஷ்டம் என்று இடித்தது மனது.
ஆனால் நான்.... நான் அவன் மீது..... கொள்ளை ஆசை வைத்திருக்கிறேனே என்று கண் நிறைந்தது.
காரின் உள்ளேயே அமர்ந்து அவன் அவளைத் தாண்டிச் செல்வதை கண்டபடி அமர்ந்திருந்தாள். காரின் கருப்பு கண்ணாடி அவளை காட்டிகொடுக்காமல் மறைத்திருந்தது.
வாசு கோமதியுடன் பேசியபடி நடந்ததால் அவளின் கார் என்பதை நோட் செய்யவில்லை.
அவன் தாண்டிச் சென்றதும் கோ வென அழுதாள்.
பின் வீட்டை அடைந்து தனது அறையில் முடங்கினாள். யார் கூப்பிட்டும் வெளியே வரவில்லை.
விடு மது, தானே தெளியட்டும்..... சீக்கிரம் இதப்பற்றி கண்டு பிடிப்போம் என்றான் வித்யா.
ஞாயிறு அசோக் வந்திருப்பதால் ஏதோ வெளியே வந்து பேசி சிரித்து நடமாடினாள்.
சொல்லாத காதல் அவளை வாட்டியது. இல்லாத சொந்தம் ஆத்திரம் கூட்டியது.

அங்கே வாசுவும் கோமதியும் வீட்டில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டனர். அவள் அவனுக்கு பிடித்தாக சமைத்தாள்.
சுந்தரம் நீ ஏன்டாமா... நான் தான் இருக்கேனே என்று தடுத்து பார்த்தார்.
இல்லை அண்ணா, நான் இன்னிக்கி மட்டுமானும் உங்க ரெண்டு பேரையும் உட்கார வைத்து செஞ்சு போடணும்னு ஆசைப் படறேன்என்று ஆசையாக சமைத்தாள்.... சாப்பாட்டு நேரத்துக்கு வெங்கட்டும் வந்து சேர்ந்து கொண்டான். ஒரே அமர்க்களமாக சாப்பிட்டு முடித்தனர்.

என்ன அண்ணா, கல்யாணம் பத்தி என்ன முடிவு பண்ணி இருக்கே?” என்று ஆரம்பித்தாள்.
கொஞ்ச நாள் டைம் குடுடா, சொல்றேன்... நானும் சீக்கிரமா பண்ணிக்கிடணும்னு தான் நினைக்கிறேன் என்றான்.
ஹ்ம்ம் சரி, சீக்கிரமா நல்ல முடிவா சொல்லுங்க மச்சான் என்றான் வெங்கட்டும். “உங்க தங்கை படுத்தல் தாங்கல என்றான் சிரித்துக்கொண்டே.
எங்கண்ணன் கிட்டே போட்டா தரீங்க? இருங்க உங்களுக்கு வெச்சுக்கறேன் என்று மிரட்டினாள்.
ஐயோ பயமா இருக்கேஎன்று அவன் நடித்தான். எல்லோரும் சிரித்தனர்.

நாலு நாட்களாக கோமதியுடன் சேர்ந்து பேசி சிரித்து ஊர் சுற்றி வந்தாலும் உள்ளுக்குள்ளே
பவி என்ன செய்கிறாளோ. அவளை பார்த்தே நான்கு நாட்கள் ஆயிற்று என்று தோன்றியது. பழைய பாடல்களை கேட்கும்போது அண்ணன் தன்னை மறந்து சொக்கிப் போகிறான் என்பதை கோமதி கவனித்தாள். சுந்தரத்திடம் நோட்டம் பார்த்தாள்.
என்னமோ கோமதி கண்ணு.... கொஞ்ச நாளாவே இப்படிதான் சொக்கி உக்காருது தம்பி என்றார் அவர்.
ஓஹோ சரி, கத்திரிக்காய் காய்த்தால் கடைத் தெருவுக்கு வரும்தானே என்று எண்ணிக் கொண்டாள்.

அத்யாயம்  நாற்பத்தி இரண்டு
திங்கள் காலை ஆபிசிற்கு செல்ல, அங்கு வாசுவைக் கண்டாள்.
அவளை நான்கு நாட்களாக காணாமல் அன்று கண்டபோது உற்சாகமாக,
குட் மார்னிங் பவித்ரா என்றான் வாசு
குட் மார்னிங் என்று முனகினாள்.
சாரி, நாலு நாள் லீவ்.... உங்களுக்குதான் சிரமம் ஆகி இருக்கும் என்றான் மன்னிப்பாக.
இட்ஸ் ஒகே..... உங்களுக்குதான் ரொம்ப வேண்டப்பட்டவங்க  வந்திருந்தாங்களாமே என்றாள் ஆத்திரமாக.
ஓ ஆமாம்... ஐ ஹாட் அ லவ்லி டைம் என்றான் தான் அவள் ஆத்திரத்தை மேலும் கூட்டுவதை அறியாமல்.

அது யாரு அப்படி ஒரு கெஸ்ட் ?” என்றாள் ஆற்றமையோடு. “சொல்லலாம்னா சொல்லுங்க...  “ என்றாள்
ஓ இதில் என்ன.... வந்திருந்தது என் தங்கை கோமதி.... அவ கணவன் வெங்கட்டிற்கு இங்கே ஏதோ ஆபிஸ் வேலை இருந்ததுன்னு அவளையும் கூட்டி வந்தாரு. அவர் வேலைய பார்க்க, நாங்க அண்ணன் தங்கை ஊர் சுற்றி கதை பேசி சாப்பிட்டு னு ஜாலிய என்ஜாய் பண்ணினோம் என்றான் ஆர்வமாக.
யாரு உங்க தங்கையா... ஓ ஹவ் நைஸ்..... அப்படியா... கோமதியா அவங்க பேரு?” என்று மகிழ்ந்து உற்சாகமாக பேசினாள். மனதிலிருந்து பெரும் பாரம் குறைந்தாற்போல உணர்ந்தாள்.

என் தங்கை தான் வந்தாள் எனத் தெரிந்ததில் இவளுக்கென்ன இவ்வளவு சந்தோஷம்?’ என்று எண்ணிப்பார்த்தான் வாசு.
அவ்வளவு நேரமும் கடினப்பட்டிருந்த அவள் முகம் இப்போது பூவாய் மலர்ந்திருக்கக் கண்டான்.
அன்னிக்கி அசோக் கூப்பிட்டிருந்தான் என்றான்.
தெரியும், நானும் அவன் பக்கத்தில் தான் இருந்தேன்
! அப்போ நீ... நீங்க ஏன் பேசலை?” என்று கேட்டான்.
எனக்கு அப்போ கோவம்
எதுக்கு யார்மேல கோவம்?”
உங்க மேல என்றாள்.
அப்போது இவனைப் போய் எப்படி எல்லாம் திட்டினேன்..... எப்படி எல்லாம் ஆகி போனேன் இந்த நான்கு நாட்களும் என்று எண்ணி வெட்கினாள்.
இல்லே... என் கிட்ட சொல்லாம லீவ் போட்டீங்கன்னு..... யாரோ லேடி கெஸ்ட்  வந்திருக்கறதா அசோக் கிட்ட சொன்னீங்களாம்... அது யாரோன்னு...” என்று வாய்விட்டாள். பின் சட்டென்று நாக்கை கடித்துக்கொண்டாள்.
என் வீட்டிக்கு யார் வந்தா இவளுக்கு ஏன் கோவம்.... இவளிடம் கூறாமல் லீவ் எடுத்தேன் என்று கோவம்.... என்ன இது.... இதற்கு என்ன அர்த்தம்....’ என்று வாசு மேலும் குழம்பினான்.

கோமதியோட சுற்றினதுல நான் எதையும் கவனம் வைக்கலை
ஆமாம் ஆமாம் அதான் தெரியுமே என்றாள்.
என்ன தெரியும்?” என்றான் சந்தேகமாக.
நான் பார்த்தேனே.... அவங்களோட நீங்க வெளிய போனீங்க என்றாள்.
இவள் என்னைக் காண வந்தாளா!!’ என்று எண்ணி
எப்போ? நீ... நீங்க வந்தீங்களா..... என்னைப் பார்க்கவா... அப்போ ஏன் உள்ள வரலை?” என்றான்
நீன்னே சொல்லலாம்..... எதுக்கு நீ நீங்க னு இப்படி கஷ்டப்படணும் என்றாள்.
சரி நீ சொல்லு, ஏன் உள்ள வரலை?”

நான் அங்க வந்தேன்.... ஆனா எந்த ப்ளாட்னு தெரியலை.... அதான் ரோடிலேயே காரில் இருந்தேன்.... அப்போ நீங்க உங்க தங்கையோட வெளியே வந்தீங்க.... நீங்க என்னை என் காரை கவனிக்கலை.... சிரிச்சு பேசிக்கிட்டு போய்ட்டீங்க என்றாள் ஆற்றாமையோடு.
சரி என்னை பார்க்க ஏன் வந்தே?” என்றான் நேராக அவள் கண்களை பார்த்து.
அவனுள் அவளது நடவடிக்கை பல நூறு கேள்விகளை கொடுத்தது.
அவனை சந்திக்க முடியாமல் தலை குனிந்தபடி இல்லை சும்மாதான்”.
இல்ல நீ எதையோ மறைக்கிறே பவித்ரா.... ப்ளிஸ் சொல்லு... என்னைப் பார்க்க வந்தியா.... என் கெஸ்ட் யாருன்னு தெரிஞ்சுக்க வந்தியா.... ஏன் அத தெரிஞ்சுக்க அவ்வளவு ஆர்வம்?” என்றான் குறும்பாக சிரித்தபடி.

அப்படி எல்லாம் ஒண்ணுமில்லியே.... உங்களை நாலு நாளா பார்க்கலை.... அந்த வழியா வேறு வேலையா வந்தேன்.... அதான் அப்படியே உங்கள பார்க்கலாமேன்னு..” என்று மென்று முழுங்கினாள்.
அவனுக்கு இப்போது நடந்தவற்றை எல்லாம் கூட்டி பார்த்தபோது மெதுவாக விளங்கியது.
ஓ அப்போது தவிப்பது நான்  மட்டும் அல்ல..... பவித்ராவும் தானா என்று வினா எழுந்தது. ஆயினும் அவள் வாயினாலே அதை தெளிய வேண்டி மீண்டும் கேட்டான்.
சரி என்னை பார்த்தியே ஏன் காரைவிட்டு இறங்கி ஹெலோ சொல்லலை? என்றான்.
இல்ல.. வந்து.... நீங்க யாரோடையோ சிரிச்சு பேசிக்கிட்டு போனீங்க.... எதுக்கு டிஸ்டர்ப் பண்ணணும்னு
ஓ அப்பிடியா!, இல்லை வாசு யாரோடவோ ஒரு பொண்ணோட ஊர் சுத்தறான் னு கோவத்தோட பேசாம இருந்துட்டியா?

நீதான் அசோக்கை விட்டு என்னைக் கூப்பிடச் சொன்னியா..... எனக்கு என்ன பர்சனல் வேலைன்னு..... வந்திருக்கறது யாருன்னு தெரிஞ்சுக்க உனக்கு ஏன் அத்தனை ஆவல் அக்கறை?” என்றான்.
அதற்குமேலும் அடக்க மாட்டாமல் அவளிடம் இருந்து  ஒரு கேவல் வெடித்தது.
ஏன் என்னன்னு கேட்டா என்ன சொல்ல முடியும்.... எஸ் நான் விசாரிச்சேன் கோவப்பட்டேன் ஆத்திரப்பட்டேன்.....
எஸ், பிகாஸ் ஐ லவ் யு சோ மச் என்றாள் விசும்பியபடி.
பின் அவன் பார்வையை சந்திக்க முடியாமல்  வெளியே ஓடி தன் ஆபிஸ் அறைக்கு போய் தாளிட்டுக் கொண்டாள்.

ஸ்தம்பித்து போய் அமர்ந்தான் வாசு.
ஓ மை காட்.... இது நிஜமா..... பவியும் என்னை விரும்புகிறாளா..... அவள் பெற்றோர் ஒப்புக்கொள்வார்களா?’ என்று நூறு கேள்விகள். எல்லாவற்றையும் மீறி ஒரு மிகப்பெரிய சந்தோஷம். திருப்தி.
ஓ பவி, ஐ லவ் யு டூ... ஆனால் அதை நான் உன்னிடம் சொல்லவில்லையே..... எப்போது எப்படி கூறுவேன்.... ஆபிஸ் நேரமாயிற்றே.... நீ சொல்லிவிட்டு ஓடி விட்டாயேடீ..... இங்கேயே ஒரு நிமிடம் நின்றிருந்தாலும் என் மனதை நானும் கூறி இருப்பேனேஎன்று மருகினான்.

அவள் மொபைலுக்கு அழைத்தான். எடுக்கவில்லை. இந்த நேரத்தில் ஆபிசில் எஸ் எம் எஸ் அனுப்புவது உசிதமா யாரேனும் கண்டுவிட்டால் என்ன செய்வது என்று தயங்கினான். சரி மதியம் லஞ்ச டைமில் முயலலாம் என்று வேலைகளை கவனிக்கச் சென்றான். மனம் எதிலும் லயிக்காது ஒரு சந்தோஷம் கிளர்ச்சி. கூடவே பயம் திகில்.

ஏதோ கொஞ்சம் முக்கிய வேலைகளை பார்த்து முடித்தான். மதியம் லஞ்ச டைமும் வந்தது.
விஷ் டு டாக் டு யுஎன்று மெசேஜ் விட்டான் பவிக்கு.
அவளே அழைத்தாள். “என்ன வேணும் உங்களுக்கு... ஏன் என்னைப் பார்த்து பேசணும், இன்னும் என்ன திட்டறதுக்கு கேள்வி கேட்பதற்கு பாக்கி இருக்கு?” என்றாள் காட்டமாக.
ஆமாம் பேசணும் பேசியே ஆகணும்..... அதுவும் இன்னைக்கே இப்போவே என்றான் அடமாக.
முடியாது. என்ன சொல்லணுமோ போன்லயே சொல்லுங்க என்றாள்.
இல்லை நான் உன் முகம் பார்த்துப் பேசணும் என்றான்.
சரி வந்து தொலைங்க என்றாள்.

அவள் காபினுக்குச் சென்றான்
. ஆபிஸ் என்பதால் நாலு பேர் பார்க்கக் கூடும் அனாவசியக் கேள்விகள் வரும் என்று, அழுது முடித்து முகம் கழுவி ஓரளவு முகத்தை மாற்றி இருந்தாள். அவள் முகம் கண்டு வாசுவின் முகம் கனிந்தது. அவள் அருகே சென்று அவள் கண் பார்த்து நின்றான்.
என்ன சீக்கிரம் சொல்லீட்டு கிளம்புங்க என்றாள் அவன் முகம் காணாது.
மெல்ல அவள் கையை பிடித்தான்.... அவள் விடுவித்துக் கொண்டாள்.... மீண்டும் பிடித்தான் இம்முறை ஆசையாக கெட்டியாக விடுவித்துக்கொள்ள முடியாதபடி இறுக்கமாக.

பின் அவள் கண் பார்த்து
ஐ லவ் யு ஸோ மச் பவித்ரா என்றான் அழ்ந்த குரலில்.
அவன் என்ன சொன்னான் என புத்தியில் பதியவே சில நொடிகள் ஆகின.
என்ன நிஜமா அவனுமா அவளை காதலிக்கிறானா!!’ என்று பிரமித்து நின்றாள்.
ஆயினும் ஏன், எதுக்கு இப்போ வந்து சொல்லணும்.... பாவம் னு பரிதாபமா.... ஒன்றும் வேண்டாம்..... எனக்கொண்ணும் யாரும் பிச்சை போட வேண்டாம் என்றாள் அவன் முகம் காணாது.

அடியே என் அழகான ராக்ஷஷியே, யாராச்சும் காதல பரிதாபப் பட்டோ பிச்சையாகவோ சொல்வாங்களா டீ?” என்று இழுத்து அணைத்துக் கொண்டான்.
என்ன பண்றீங்க... இது ஆபிஸ் என்று விலக முயன்றாள்.
அது எனக்கும் தெரியும்.... ஆபிஸ் என்றும் பார்க்காமல் காதல் சொன்னவள் நீ..... என்னையும் கூற வைத்து உசுப்பி விட்டவள் நீ.... இப்போ விலகினா அது எப்படி என்றான் உரிமையாக.
நீங்க நிஜமா சொல்றீங்களா?” என்றாள் மீண்டும் சந்தேகமாக.
சத்தியமா சொல்றேன் என்றான்.

இது நடக்குமா, பெரியவங்க ஒத்துப்பாங்களா வாசு?” என்றாள் பயத்துடன்.
பாப்போம், ஒத்துக்க வைப்போம்.... நாம ஒண்ணும் தப்பு செய்யலையே.... காதலிப்பது தப்புன்னு உங்கப்பாம்மா சொல்ல முடியாதே... ஏன்னா அவங்களே காதலித்து கல்யாணம் பண்ணினவங்கனு கேள்விப்பட்டேனே என்றான்.

ஹேய் கண்ணம்மா, இன்னொரு முறை என்னைப் பார்த்து சொல்லுடி என்றான்.
என்னத்தை?” என்று ஏறிட்டவள் அவன் கண்ணில் தெரிந்த ஆசையை புரிந்து நாணத்துடன் ஐ லவ் யு வாசு என்றாள் தலை குனிந்தபடி. அவள் முகம் நிமிர்த்தி ஐ லவ் யு டூ ஸ்வீட் ஹார்ட் என்றான்.
அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
நாம போராடியானும் ஜெயிப்போம் டா.... தைர்யமா இரு என்றான்.
சரி கொஞ்சம் வேலையும் பார்ப்போமா?” என்றான் சிரித்தபடி. அவளும் தெளிந்து அவனோடு சேர்ந்து சிரித்தாள்.
வரட்டுமா?” என்றான்.

அவன் தனது அறைக்கு போவதையே தாங்காமல் கலங்கினாள்
.
இவள்தான் எப்பேற்பட்டவள்.... இவள் காதல்தான் எவ்வளவு உயர்ந்தது என்று மாய்ந்து போனான் வாசு.
ஆனா ஒண்ணுடீ ஆபிஸ்ல வெச்சு காதல் சொல்லிகிட்ட ஒரே ஜோடி நாமளாத்தான் இருப்போம் என்றான்.
ஆமா, என்னை கட்டாயப்படுத்தி சொல்ல வெச்சுட்டு...”. என்று முனகினாள்.
நானா.... என்னை யாரு வேவு பார்க்க வந்ததாம், யாரு போன் செய்து விசாரிச்சதாம்?” என்று அடுக்கினான்.
எல்லாம் நாந்தான்.. அதுக்கு என்ன இப்போ..... எனக்குரியதை நான் யாருக்கும் விட்டு குடுக்க மாட்டேன் என்றாள் அழுத்தமாக.

அப்போ நான் உனக்குரியவனா?” என்று குழைந்தான்.
என்ன பண்றீங்க... இது ஆபிஸ் என்று தடுத்தாள்.
போடி உசுப்பி விட்டுட்டு இப்போ தடை போடறா.... சரி சீக்கிரமா உன் பெற்றோர்கிட்ட பேசு.... இல்லைனா நான் வந்து பேசட்டுமா?” என்றான்.
ஐயோ, சும்மா இருங்க.. நான் சொல்றேன்... அப்போ பேசலாம் என்றாள். சரி என்று வேலையை பார்த்தனர்.
ஹேய் பவித்ரா, ஈவ்னிங் மீட் பண்ணுவோம் ப்ளிஸ் என்று கேட்டுக்கொண்டான்.
சரி, நான் அப்பாகிட்ட மெசேஜ் சொல்லி அனுப்பீட்டு வரேன் என்றாள் .
ஒகே ஒகே என்றான் கண் சிமிட்டியபடி.
பாரு, சரியான வாலு... கண் அடிக்குது என்று சிரித்துக்கொண்டாள்.


அத்யாயம் நாற்பத்தி மூன்று
அன்று பவி மீண்டும் கலகலப்பாக இருப்பதைக் கண்டு வித்யா ஆச்சர்யப்பட்டான். என்ன காரணம் என்று யோசிக்க அன்று வாசு லீவ் முடித்து வேலைக்கு வந்திருப்பது உரைத்தது.... அப்போ இது அதுவேதான... அதைத்தானே மது கூறினாள்.... இது நடக்குமா, அவன் யாரோ எவனோ என்ன குடும்பமோ ஒன்றும் தெரியாத நிலையில் இந்தப் பேதை பெண் அவன்மேல் ஆசை வைத்துவிட்டாள் போலிருக்கிறதேஎன்று கவலையுற்றான்.

அங்கே வீட்டில் அசோக் மதுவிடம்
அம்மா கொஞ்சம் பேசணும் பவிக்கா பத்தி என்றான். “சொல்லுடா என்றாள்
இல்லைமா, பவி கா கொஞ்ச நாளா டிஸ்டர்ப்டா இருக்கா...”
ஆமாம் நாங்களும் கவனிச்சோம் என்றாள்
ரெண்டு நாள் முன்னாடி நான் காஷுவலா வாசு சார் பத்தி கேட்டேன்.... அவர் நாலு நாள் லீவ் னு அவங்க வீட்டுக்கு யாரோ லேடி கெஸ்ட் வந்திருக்காங்கன்னு அக்காவுக்கு ஒரே கோவம்.... எனக்கு ஆச்சர்யமா இருந்துது.... என்னன்னு கேட்டா ஒண்ணும் சொல்லவுமில்லை என்றான்.
ம்ம் என்று உள் வாங்கிக்கொண்டாள்.
அதான் ஒருவேளை வாசுவ அக்கா விரும்பறாளோன்னு...” என்றான் சந்தேகமாக.
அசோக், நீ வளர்ந்துட்ட என்றாள் மது சிரித்தபடி அவன் தலைமுடியை கலைத்துவிட்டாள். “போம்மா என்று சிரித்தான்.

ஆமாம் அசோக், எனக்கும் அப்பாவிற்கும் கூட அந்த சந்தேகம் இருக்கு.... அவளை கண்காணிச்சுகிட்டுதான் இருக்கோம்.... பார்க்கலாம்... சீக்கிரம் ஏதானும் நல்லது நடக்கும்.... ஆனா அந்த வாசு நல்ல மாதிரியாவே தெரிந்தாலும் யாரோ என்னமோ குலம் கோத்திரம் என்னவோ அதான் பயம்மா கவலையா இருக்குடா என்றாள்.
அம்மா, ஒண்ணு செய்யட்டுமா... நான் ப்ரண்ட்லியா போய் அவரை பார்த்து, வீட்டு நிலவரம், அவர் யாரு என்ன பாக்கிரவுண்டு னு நோட்டம் பார்த்து வரவா..... அதுவரை நீங்க பிக்சர்ல வரவேண்டாம் என்றான் பெரிய மனுஷனாக.
அதுசரி டா, அவ மனசுல அவன்தான் இருக்கானா.... அவ அவனைப் பத்தி அந்த மாதிரி சீரியஸா இருக்காளான்னு மொதல்ல தெரியணுமே.... நீ மொதல்ல அதைக் கண்டுபிடிக்கப் பாரு..... பின்னால வாசுவை நோட்டம் விடலாம் என்றாள்.

கரெக்ட் மா.... இன்னிக்கி ஈவ்னிங் அதான் என் வேலை என்றான்.

மாலை பவி வித்யாவிடம் வந்து அப்பா எனக்கு கொஞ்சம் வெளிவேலை இருக்கு... கொஞ்சம் சாமான் வாங்கணும்... போய் முடிச்சுட்டு வீட்டுக்கு வரேன்.... அம்மாகிட்ட சொல்லீடுங்க என்றாள் சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டு.
ஓ அப்பிடியா சரி மா... பாத்து போயிட்டு வா என்றான் வித்யா.
வீட்டிற்குச் சென்று மதுவிடம்  எல்லாமும் கூற அசோக்கும் இருந்தான்.
அம்மா கன்பர்ம்ட்... அக்கா அவரப் பார்த்து பேசத்தான் போயிருப்பா.... நான் சொல்றேன் பாரு.... கொஞ்ச நேரத்துல தீர்மானமா தெரிஞ்சுடும் என்று நகர்ந்தான்.
என்ன சொல்றான் அசோக்?” என்று கேட்டான் வித்யா.
அதான், நாம பேசினதையே தான் அவனும் பீல் பண்றான்... தானே பவிகிட்டையும் உண்மையான்னு கண்டுபிடிச்சுட்டு வாசுவின் வீட்டிற்கு ப்ரண்ட் மாதிரி போய் பாக்கிரவுண்ட் தெரிஞ்சுண்டு வரேன்னு சொல்றான் என்று விவரித்தாள். ‘இவ்வளவு வளர்ந்துட்டானா என் பிள்ளை!’ என்று நினைத்துக் கொண்டான்.

முதலில் வாசு தன் பைக்கில் கிளம்ப பின்னோடு பவி தனது காரில் அவனைத் தொடர்ந்து சென்றாள். அவன் வீட்டிற்கே வரும்படி கூறி இருந்தான். கொஞ்சம் பயம்தான் ஆனாலும் அவன் மேல் நம்பிக்கையும் இருந்தது. வீட்டில் சுந்தரம் வேறு இருக்கிறார் என்றானே என்று தைர்யமாக கிளம்பிவிட்டாள்.
வீட்டை அடைந்து அவனோடு லிப்டில் மேலே சென்றாள். இரண்டாம் தளத்தில் இருந்தது அவனது பிளாட். மிக கச்சிதமான இரண்டு படுக்கை அறை கொண்ட அழகான பிளாட். வெகு நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. அழகான ஓவியங்கள் சுவற்றில் கண்ணை கவர்ந்தன.

இதெல்லாம் கோமதி வரைஞ்சது என்றான் பெருமையாக.
வா பவித்ரா.... இதுதான் இந்த ஏழையின் குடிசை என்றான்.
போதுமே இதுவா குடிசை.... இட்ஸ் ஸோ ப்யுடிபுள் என்றாள் மனதார. “எவ்வளவு அழகா வெச்சிருக்கீங்க.... வாலிபர்கள் தங்கும் வீடு போல இல்லாம லக்ஷ்மிகரமா இருக்கு என்று மெச்சிக்கொண்டாள்.
அதில் பெரும் பங்கு என் தங்கைக்கும் சுந்தரம் அண்ணாவுக்கும் தான் சேரும்.... இருப்பதை கெடுக்காம அப்படியே பாத்து நல்லபடியா வெச்சுக்கறேன் ன்னு வேணா சொல்லலாம் என்றான்.

அதற்குள் சுந்தரம் வர அவரை அறிமுகம் செய்தான்
. “அண்ணா, இவங்க பவித்ரா என் ஆபீஸ்ல...” என்று நிறுத்தினான்.
ஓ அப்பிடியா, வாங்கம்மா வணக்கம்... என்ன சாப்பட்றீங்க என்று கேட்டார்.
காபி மட்டும் போதும் என்றாள்
சரி தோ வரேன்... கூட கொஞ்சமா ஸ்நாக்ஸ் கொண்டு வரேன்... மொதவாட்டியா வந்துருக்கீங்க என்று உற்சாகமாக உள்ளே ஓடினார்.
ஹி இஸ் ஸோ நைஸ் என்றாள்.
 “ஹ்ம்ம் ஆமாம், ரொம்ப நல்ல மனிதர் என்றான்.
நான் போய் பார்க்கறேன்... ஏதானும் ஹெல்ப் வேணுமான்னு என்று அவன் தடுக்கும் முன்னே உள்ளே சென்றாள்.

சமையல் அறை சுத்தமாகப் பளிச்சென்று இருந்தது
.... அவர் காபி போட்டுக்கொண்டிருக்க இவள் கப்புகளை எடுத்து கழுவி ட்ரேயில் அடுக்கினாள்.
நீங்க ஏம்மா, நான் பாத்துக்கறேன் என்று தடுத்து பார்த்தார்.
இருக்கட்டும் அண்ணா என்று அவர் காபியை ஊற்ற இவள் பக்கத்தில் இருந்த ஸ்நாக்ஸ் ட்ரேயை தூக்கிக்கொண்டு முன்னே நடந்தாள்.
பாரு தம்பி, சொன்னா கேக்காம வேலை எல்லாம் செய்யறாங்க என்றார்.
அவன் சிரித்துக்கொண்டான். உள்ளுக்குள்ளே அவள் அப்படி சட்டென்று எந்த பந்தாவும் பகட்டும் இல்லாமல் உள்ளே சென்று வேலையில் தன்னை ஈடு படுத்திக்கொண்டது அவனுக்கு மிகவும் பிடித்துதான் இருந்தது.

 தொடரும்...

No comments:

Post a Comment